ஈரோடு மே 29: ஈரோடு மாவட்டத்தில் கொரானா தடுப்புக்கான ஊரடங்கால், காய்கறி, பழம், மளிகை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக, மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறி, பழங்களை ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வைத்து பிரித்து, 800 தள்ளு வண்டி, வேன், சிறிய லாரிகளில் எடுத்து சென்று தெருக்களில் விற்பனை செய்கின்றனர்.காய்கறி, பழங்கள் அதிகமாக வரத்தாவதால் அவற்றின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. கடைகளில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, ேஹாட்டல், விடுதி பிற இடங்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், இவற்றை பாதுகாக்க முடியாத நிலையில், கடந்த சில நாட்களில் காய்கறி விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.நேற்று ஒரு கிலோ தக்காளி – 16 ரூபாய், கத்தரிக்காய் – 42, வெண்டை – 36, புடலங்காய் – 36, பீர்க்கன் காய் – 72, ஒரு சுரைக்காய் –  12, பூசணி – 16, அவரை – 42, நாட்டு அவரை – 60, பாகை – 42, முள்ளங்கி – 36, மிளகாய் – 42, பெரிய வெங்காயம் – 25 – 30, சின்ன வெங்காயம் – 40 – 50, முருங்கைக்காய் – 50, சேனைக்கிழங்கு – 20, கருணைக்கிழங்கு – 50, மரவள்ளி – 15, தேங்காய் – 10 – 25 ரூபாய், வாழைக்காய் – 4 – 7, இஞ்சி – 50, உருளை கிழங்கு – 32, கேரட் – 54, பீட்ரூட் – 48, பீன்ஸ் – 80, முட்டைகோஸ் – 18, பப்பாளி – 20, கொய்யா – 45, சப்போட்டா – 35, தர்பூசணி – 10,  மாதுளை – 135, மாம்பழம் – 30 – 50, ஆப்பிள் – 216 – 230, சாத்துக்குடி – 120, முலாம்பழம் – 24, பன்னீர் திராட்சை – 72 ரூபாய்க்கு விற்பனையானது.இக்காய்கறிகளை, 60 ரூபாய், 80 ரூபாய், 100 ரூபாய் தொகுப்பாக பல்வேறு காய்கறி கொண்ட பைகளிலும், தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவைகளை ஒரு கிலோ, இரண்டு கிலோ, ஐந்து கிலோ என்ற பைகளிலும் தொகுப்பாக விற்பனை செய்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே