ஈரோடு ஜூன் 3: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்த பிறகு, கடந்த இரண்டு நாட்களாக 102 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.இரவு 8 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. இரவு 11.40 மணியளவில் பலத்த மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 55.3 மில்லி மீட்டர் மழை பதிவான. ஈரோடு – 15 மில்லி மீட்டர், பெருந்துறை –- 4, கோபி – -19.4, சத்தியமங்கலம் –- 19, பவானிசாகர் –- 6.6, பவானி – 23, சென்னிமலை – 3, கவுந்தப்பாடி –- 55.3, இலந்தைகுட்டைமேடு – 2.8, அம்மாபேட்டை – -21.4, கொடிவேரி –- 32, குண்டேரிப்பள்ளம் –- 23, வரட்டுப்பள்ளம் –- 7.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நிருபர்.
ஈரோடு டுடே