ஈரோடு ஜூன் 7: ஈரோடு அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் விவசாயி குமரேசன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்படும் ஆலைக்கரும்பை பயிரிட்டு இருந்தார்.நேற்று இரவு திடீரென கரும்பு தோட்டத்தில் இருந்து பயங்கரமான புகை எழுந்தது. கரும்பு தோட்டத்தில் தீப்பற்றியது தெரியவந்ததும், அதனை அணைக்க முயன்றனர். அதற்கும் மளமளவென முழு தோட்டத்திலும் பரவியது.பவானி தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு எரிந்தன. கரும்பு காட்டில் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை.
நிருபர்.
ஈரோடு டுடே