ஈரோடு ஜூன் 10: தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன் தலைமையில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஊரடங்கால்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா  ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். பின், வரகப்பா வீதியில்  கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, தி.மு.க., பகுதி செயலாளர் பொ.ராமசந்திரன், துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, பாபு, ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே