கடை மடையை சென்று சேராத கல்லணை நீர்

கல்லணைத் திறந்து 120 நாட்களுக்கு மேலாகியும் கடை மடை பகுதிகளுக்கு நீர் சரியாகச் சென்று சேரவில்லை என உழவர்கள் கூறுகின்றனர்.

மழையும் போதிய அளவு பெய்யாததால், சேதுபா சத்திரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நீரின்றி, ஏரி மற்றும் குளங்களில் நீரின்றி வறண்டு காணப்படுகின்றது, ஆற்று நீரும் சரியாக கடை மடைப்பகுதிக்கு வந்து சேராததால் உழவர்கள் சம்பா சாகுபடியை சரிவர செய்ய முடியுமா என்கின்ற கவலையில் உள்ளனர்