ஈரோடு சூன் 9: ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் உள்ள மகளிர் குழுக்கள், அரசு சாரா நிறுவனம் மூலம் இயங்கும் மகளிர் குழுக்கள் இயங்குகின்றன.இக்குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றன. கொரோனா தொற்றுக்கான ஊரடங்கு வரும் 13 வரை அமலில் உள்ளது.அனைத்து பொதுத்துறை, சிறு நுண் நிதி நிறுவனங்கள், இதர நிதி சார்ந்த அமைப்புகளிடம் பெற்ற கடன் தவணை தொகை, வட்டியை திரும்ப செலுத்தக்கோரி, மிரட்டுதல், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாக புகார்கள் வருகிறது.நெருக்கடியான சூழலில் கடன் தவணை வசூலிக்கும்போது கடின போக்கை கடைபிடிக்க வேண்டாம். ரிசர்வ் வங்கி அறிவித்த விதிமுறைகள், அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நுண் நிதி நிறுவனங்கள், இதர நிதி சார்ந்த அமைப்புகளுக்கும் பொருந்தும்.வழிகாட்டு நெறிமுறையை மீறி செயல்படும் நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கேட்டு கொண்டார்.

நிருபர்.
ஈரோடு டுடே