ஈரோடு மே 31: ஊரடங்கு முடியும் வரை கடன் தொகை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும், என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை சிம்ரன் தலைமையில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியதாவது:கொரானா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து தவித்து வருகிறோம். பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்துள்ளோம். உணவிற்காக கையேந்தும் நிலையில், வீட்டு வாடகை, வாகன கடன் செலுத்த வேண்டும் என்று மிகவும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் கடன் தொகை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே ஊரடங்கு முடியும் வரை வாகன கடன் செலுத்துவதற்கு அவகாசம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே