ஈரோடு ஜூன் 10: ஈரோடு மாவட்ட ஐ.என்.டி.யு.சி., அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி., முன்னாள் தலைவர் ஜி.காளன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் கே.ஆர்.தங்கராஜ் தலைமையில் நடந்தது.முன்னாள் தலைவர் காளன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட பொருளாளர் கே.ராமசாமி, மகளிர் பிரிவு செயலாளர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே