ஈரோடு மே 30: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 4.75 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் சுற்றினால் 200 ரூபாய் அபராதம், முககவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். சுகாதாரத்துறையினர், போலீசார், போக்குவரத்து போலீசார் என அந்தந்த பகுதியில் அபராதம் வசூலிக்கின்றனர்.நேற்று முககவசம் அணியாத 400 பேருக்கு தலா 200 ரூபாய், சமூக இடைவெளியை பின்பற்றாத, 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் பெற்றனர். தடையை மீறி வாகனங்களில் சென்ற, 1,005 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 850 இரு சக்கர வாகனங்கள், 25 கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் இருந்து 4.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே