ஊரடங்கு மீண்டும் நீட்டிப்புதேங்காய் பருப்பு ஏலம் ரத்துபெருந்துறை சூன் 21:பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் பருப்பு ஏலம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும்.தமிழகத்தில் மிக அதிக அளவில் தேங்காய் பருப்பு இங்கு நடக்கும் ஏல விற்பனையில் வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எண்ணெய் உற்பத்தி, மருந்துவ பயன்பாடு, உணவு பொருட்களுக்கான பயன்பாட்டுக்காக இவற்றை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.தமிழகத்தில் வரும் 28 ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரும் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேங்காய் பருப்பு ஏலம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு ஏலம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே