ஈரோடு சூன் 14: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுடன் ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்க துவங்கியன.ஊரடங்கால் விசைத்தறி, ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், கடைகள், ஷாப்பிங் மால், பூங்கா, பொது போக்குவரத்து முற்றிலும் மூடப்பட்டன. தொற்று குறைந்ததால், ஈரோடு, சேலம், கரூர், கோவை, திருப்பூர் போன்ற 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்பட்டது. 11 மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை முதல் மாலை வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆட்டோ, டாக்சி, டூவீலர் ஒர்க்‌ஷாப் போன்றவை இயங்க அனுமதி உள்ளது. டாக்சியில் டிரைவர் உட்பட நால்வரும், ஆட்டோவில் டிரைவர் உட்பட மூவரும் பயணிக்கலாம். டாக்சியை வாடகைக்கு எடுப்பவர்கள் இ பதிவு செய்து பயணிக்கலாம்.வாகன பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகிறது.

நிருபர்.
ஈரோடு டுடே