பெருந்துறை மே 29: ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும், புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பல லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் எனப்படும் தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடக்கும். தமிழகத்தில் தேங்காய் பருப்பு விற்பனை அதிகம் நடக்கும் ஏலக்கூடம் இங்குள்ளதால், பல்வேறு பகுதி விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்பார்கள்.தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகமாக இவற்றை வாங்கி சென்று, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாடு, பல்வேறு உணவு பொருள் பயன்பாட்டுக்கும் பயன்படுத்துவர்.கொரோனா தொற்றுக்கான முழு ஊரடங்கால், வரும் ஜூன், 2, 5 ஆகிய நாட்களில் நடக்க இருந்த தேங்காய் பருப்பு ஏலம் ரத்து செய்யப்படுகிறது. மறு ஏலம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.––––––––