ஈரோடு ஜூன் 2: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் உள்ள உரம், இடுபொருட்கள் விற்பனையை, வேளாண்மை துறை இணை இயக்குனர் எஸ்.சின்னசாமி ஆய்வு செய்தார்.அங்கு, அவர் கூறியது: குறுவை நெல் பயிர் உட்பட அனைத்து பயிர் சாகுபடிக்கும் தேவையான உரம், விதை, பூச்சி மருந்து முழுமையாக கிடைக்கும் வகையில் உரக்கடைகளில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெற்ற 575 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளில் இவை விற்கப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம்–5223 டன், டி.ஏ.பி,– 1301 டன், பொட்டாஷ்–2955 டன், காம்ப்ளக்ஸ் உரம்–6343 டன் என 16,257 டன் உரம் விற்பனை நிலையங்களில் உள்ளன.உரம் விற்பனை செய்வோர் அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்கக்கூடாது. கூடுதல் விலைகஅகு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களை பி.ஓ.எஸ்., முனைய கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும், என்றார்.

நிருபர்.
ஈரோடு டுடே