ஈரோடு ஜூன் 5: ஈரோடு வட்டார வேளாண் உதவி இயக்குpர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:உழவர்கள் பயிர் செய்வதற்கு முன்பாக தங்கள் வயலில் மண் மாதிரிகள் எடுத்து மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து, ஆய்வு முடிவுப்படி உரங்களை இடுவதால் உரச்செலவு குறைவதுடன், அதிக மகசூல் பெறலாம். உழவர்கள் தங்களது விளை நிலத்தின் மண் மாதிரியை பரிசோதனை செய்து, என்ன பயிர் செய்யலாம் என அறிய வேண்டும்.மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணுாட்டங்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அடுத்து பயிர் செய்யப்படும் பயிருக்கு தேவையான உரங்களின் அளவு போன்ற விபரங்கள் வழங்கப்படும். மண் மாதிரி பரிசோதனை கட்டணம் ரூ.20 ஆகும்.ஈரோடு வட்டாரத்தில் மண் வள இயக்க திட்டத்தின் கீழ், மண் மாதிரிகள் உழவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருவதால், அனைத்து உழவர்களும் ஈரோடு வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே