பவானி ஜூன் 1: பவானி அருகே சித்தோடு, நசியனுார் ராயன் கார்டனை சேர்ந்தவர் சக்திவேல்(76). நேற்று முன்தினம் மதியம் இயற்கையாக இறந்தார். இவரது உடலை தகனம் செய்ய, ஈரோடு மற்றும் பெருந்துறை மயானத்தை தொடர்பு கொண்டனர். அங்கு உடலை பலரும் பதிவு செய்துள்ளதால், நசியனுார் சுடுகாட்டில் அடக்கம் செய்ய இரவில் உடலை எடுத்து சென்றனர்.அப்பகுதி மக்கள், ‘தங்கள் சுடுகாட்டில், உடலை புதைக்கக்கூடாது’ எனக்கூறி தகராறு செய்தனர். சக்திவேலின் உறவினர்கள் பேசிப்பார்த்தும், உடலை புதைக்க அனுமதிக்காததால், அங்குள்ள அப்பத்தா கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.சித்தோடு போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பவானி மின் மயானத்தில் உடலை எரிக்க நேரம் பெற்று தந்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு, உடலை பவானிக்கு எடுத்து சென்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே