ஈரோடு ஜூன் 6: ஈரோடு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கடந்த ஆண்டு மே மாதம் ஈரோடு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்த நிலையில் அவரை மதுரை மாநநகர சட்டம் – -ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக ஈரோடு எஸ்.பி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி வி.சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்து, ஈரோடு எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார்.இவர் நீலகிரி மாவட்ட எஸ்.பி., மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது தொலை தூரத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக தனிசெயலி (ஆப்) புகார் முறையை அறிவித்து மக்கள் மத்தியில் நல்லப்பெயரை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்.
ஈரோடு டுடே