ஈரோடு பகுதியில் இரு நாட்கள் மின் நிறுத்தம்ஈரோடு மே 29: ஈரோடு பகுதியில் மே 31 ம் தேதி மின் பராமரிப்பு பணியால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.இதனால், ஈரோடு அய்யன்வலசு மின்பாதையில் உள்ள, காந்தி நகர், கருங்கரடு, காஞ்சிகோவில், பல்லபாளையம், அரியாங்காடு, பாலசுந்தராபுரம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, கரிச்சிகவுண்டன்பாளையம், தங்கமேடு, செங்காளிபாளையம் கிராம பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.அதேபோல, ஜூன் 2 ம் தேதி மின் பராமரிப்பு பணியால், நடுவலசு மின் பாதையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.இதனால், பெத்தாம்பாளையம், கொளத்தான்வலசு,  மூலக்கடை, எளையாம்பாளையம், பூச்சம்பதி, பொன்னாண்டான்வலசு, நல்லாம்பட்டி, ஓசைப்பட்டி, கோவில்பாளையம், காந்தி நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.

நிருபர்.
ஈரோடு டுடே