ஈரோடு ஜூன் 3: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக இரவில் மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது.ஈரோடு மாவட்டம் கடந்த பல நாளாக கடுமையான வெயில் நாட்டுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மின்னல், இடியுடன் மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில் அதிக வெயில் வாட்டினாலும் மதியம் 1 மணிக்கு மேல் மேகமூட்டமாகவும், குளிர்ந்த காற்றும் வீசியது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு 20 மில்லி மீட்டர், நம்பியூர் 11, சத்தியமங்கலம் 8, இலந்தைகுட்டைமேடு 5.6, பெருந்துறை 5, கோபி 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அடர்த்தியான மழை பெய்துள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே