ஈரோடு ஜூன் 6: ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரானா பரிசோதனை செய்ய 10 ஆட்டோக்களில் லேப் டெக்னிஷியன்களை அனுப்பி கொரானா தொற்று அதிகம் உள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்கின்றனர்.ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வீடுகளுக்கு ஒருவர் என 200 மாநகராட்சி பணியாளர்கள், 1,200 தன்னார்வலர்கள் என 1,400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் 100 வீடுகளுக்கும் சென்று அவ்வீடுகளில் காய்ச்சல், சளி, இருமல் உட்பட கொரானா அறிகுறி தென்பட்டால், அவர்களது சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியது,வீடுவீடாக சென்று கொரானா அறிகுறிகளை கண்டறியும் நடவடிக்கைக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது. அவ்வாறு செல்லும் இடங்களில் கொரானா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அங்கு மருத்துவர்கள் குழுவினர் சென்று பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும் அவர்களை தற்காலிக கொரானா சிகிச்சை மையங்களுக்கு அனுப்புகிறோம். அதிகமாக காய்ச்சல், கொரானாவால் பாதித்தோரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்.கொரானா பரிசோதனைக்கு வர முடியாதவர்களை மாநகராட்சி சார்பில் பத்து ஆட்டோக்கள் ஏற்பாடு செய்து லேப் டெக்னிஷியன்கள் அனுப்பி வைத்து, கொரானா பரிசோதனை செய்து வருகிறோம். இதனால் கொரானா நோயாளிகள் தெருக்களில் செல்வதும், மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பும் குறையும். பாதுகாப்பான முறையில் கொரானா பரிசோதனை செய்து முடிக்கப்படும்.இவர்கள் தொடர்ந்து பரிசோதனையில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு கூறினார்.

நிருபர்.
ஈரோடு டுடே