ஈரோடு மே 31: ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பில், மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கொரானா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆக்சிஜன் இணைப்பு படுக்கைகள் கொண்ட வேன் வழங்கப்பட்டது.ஈரோடு அரசு மருத்துவமனையில் வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் சி.மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் செல்வகுமார், செயலாளர் கில்காமேஷ், பொருளாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்து, மருத்துவமனை நிர்வாகத்தினம் வேனை வழங்கினர்.இந்த வாகனம், 6.50 லட்சம் ரூபாய் செலவில் தலா, பத்து லிட்டர் ஆக்சிஜன் காஸ் கொண்ட சிலிண்டருடன், ஐந்து நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வழங்கும்படி மாற்றி அமைத்துள்ளனர்.இந்த வேன் மொடக்குறிச்சி மற்றும் தேவையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். இந்த அமைப்பு சார்பில், ஏழைகளுக்கு தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 4,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 உணவு பொட்டலங்கள் வழங்க நடவடிக்க எடுத்து வருகின்றனர்.
நிருபர்.
ஈரோடு டுடே