ஈரோடு மே 29: ஈரோடு யங்க் இண்டியன்ஸ் அமைப்பு, சி.ஐ.ஐ., சார்பில் கொரானா பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வழங்கும் வகையில் வடிவமைத்த பஸ்ைஸ, மாநகராட்சி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல், கொரானா நோயாளிகள் சிரமப்படுகின்றனர். அவர்களுக்காக மாற்றி அமைக்கப்பட்ட இந்த பஸ்ஸில் உள்ள டேங்க்கில் நீரை தொடர்ந்து நிரப்பும்போது, ஒன்பது லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தியாகி, 8 நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் பயன் தரும்.இதற்கான பராமரிப்பை, மாநகராட்சி நிர்வாகம் செய்ய உள்ளது

நிருபர்.
ஈரோடு டுடே.