அந்தியூர் சூன் 24: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவில்நத்தம் வனப்பகுதியில், பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடபர்கூர் காப்புக்காடு கௌரிமடுவு என்னும் இடத்தில் மலைச்சரிவில் கால் இடறி கீழே விழுந்து காட்டு யானை ஒன்று, தலையில் அடிபட்டு இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட வனச்சரக அதிகாரி, இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜூ விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், பர்கூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ், யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தார்.பின்னர் இறந்த யானையை மாமிச உன்னிகளான வன விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே